Advertisment

Punnagai Logo

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து ஸ்டாலின் சாலைமறியல்...

சென்னையில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பேரணியாக சென்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டார். 

அவருடன் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பலரும் மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து கட்டணத்தை 60 சதவீத அளவில் ஏற்றிவிட்டு, 5 சதவீத அளவில் கட்டணத்தை குறைத்து, மக்களை அதிமுக அரசு ஏமாற்றி இருப்பதாகவும் ஸ்டாலின் அப்போது குற்றம்சாட்டினார். 

இதேபோல், தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக்கட்சிகளும் பங்கேற்றுள்ளன.

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன முழக்கங்களும், சாலைமறியல்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

 
 

Advertisment

English Summary

DMK Working President MK Stalin at Tamil Nadu opposition parties protest demanding roll back of bus fare hike

 
NewsFast Logo