Advertisment

Punnagai Logo

இஸ்லாமியர்களில் 2-வகை... கர்நாடக பாஜகவினர் சர்ச்சைப்பேச்சு...

கர்நாடகாவில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்,  அங்கு பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே வார்த்தைப்போர், அறிக்கைப்போர் என்று அடுத்தடுத்து பல பிரச்சனைகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், கர்நாடக பாஜக தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ஈஸ்வரப்பா இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்கருத்தைக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் இஸ்லாமியர்கள் கெட்டவர்கள் என்றும், பாஜகவுடன் நட்பு வைத்திருக்கும் இஸ்லாமியர்கள் நல்லவர்கள் என்றும் ஈஸ்வரப்பா கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவைச் சேர்ந்த 22 தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த ஈஸ்வரப்பா, முட்டாள்தனமாக பேசுகிறார் என்று கூறியுள்ளார். கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், சிறுபான்மையின மக்கள் இதனை புரிந்து கொண்டு பாஜகவிற்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்றும் சித்தராமைய்யா கேட்டுக் கொண்டுள்ளார். 
 
தேசியவாதம் குறித்து வாய்கிழிய பேசிவரும் பாஜக, கர்நாடக தேர்தலுக்காக இஸ்லாமியர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் ஆர்சாத் குற்றம்சாட்டினார்.

 
 

Advertisment

English Summary

"Good Muslims, Bad Muslims": Karnataka BJP Leader Triggers Controversy

 
NewsFast Logo