Advertisment

Punnagai Logo

வேண்டுமானால் என்னை நீக்கிக்கொள்ளுங்கள்... யஷ்வந்த் சின்ஹா பேட்டி...

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா, அக்கட்சியின் தலைமைக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளாக போர்க்கொடி உயர்த்தி வருகிறார், பாஜகவின் தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கூறி வருகிறார். 

இந்நிலையில், தேசிய மன்றம் என்ற ஒரு அமைப்பை யஷ்வந்த் சின்ஹா தொடங்கியுள்ளார். இதற்கு அக்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில், பாஜகவில் இருந்து தாம் ஒருபோதும் விலகப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

வேண்டுமானால், பாஜகவில் இருந்து என்னை நீக்கிக்கொள்ளட்டும் என்றும் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். விவசாயத்தை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் மத்திய பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக தாம் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

 
 

Advertisment

English Summary

I Won't Leave BJP, It Can Expel Me If It Wants: Yashwant Sinha

 
NewsFast Logo