Advertisment

Punnagai Logo

அட்டூழியங்களை நிறுத்தாவிட்டால் புத்த மதத்திற்கு மாறுவேன் – ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்கு மாயாவதி எச்சரிக்கை

 

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுவதை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிறுத்திக்கொள்ளாவிடில், தனது ஆதரவாளர்களுடன் புத்தமதத்திற்கு மாறப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஹாரஷ்டிர மாநிலம் நாக்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு நேற்று  நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நடந்த இந்த மாநாட்டில்  மாயாவதி கலந்துகொண்டு பேசியதாவது:

‘‘பாபாசாகேப் அம்பேத்கர், இந்துவாக பிறந்த நான், இந்துவாக சாக விரும்பவில்லை என இதே நாக்பூரில் 1935 ஆம்  தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இந்துமத தலைவர்களுக்கு அவர் 21 ஆண்டுகள் அவகாசம் வழங்கினார். ஆனால், அவர்கள் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. எனவே 1956 ஆம்  ஆண்டு நாக்பூரில் அவர் புத்தமதத்திற்கு மாறினார்.

இதுபோன்ற மதமாற்றத்தால் இந்து சமூக தலைவர்கள், தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய மரியாதையை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர்கள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை தொடர்ந்து சுரண்டுகிறார்கள். தலித் மற்றும் பிறப்படுத்தப்பட்ட மக்களையும், அவர்களின் தலைவர்களையும் ஜாதி ரீதியாகவும், மதரீதியாகவும் மரியாதை குறைவாக நடத்துவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நானும், எனது கோடிக்கணக்கான ஆதரவாளர்களும் புத்தமதத்திற்கு மாறுவோம்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவினர் தங்கள் செயல்பாடுகளை சீர்திருத்திக் கொள்ளவும், மனநிலையை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு தருகிறேன். இல்லையென்றால் உரிய நேரத்தில் நான் மதம் மாறுவேன்.

மக்களவை தேர்தலுக்கு முன், அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணியை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் மோசமான செயல்பாடுகள், கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகிவரும் நிலையில், இதுபோன்ற சதித்திட்டத்தை செயல்படுத்த பாஜக திட்டமிடுகிறது.

இவ்வாறு மாயாவதி பேசினார்.

 
 

Advertisment

English Summary

Mayawati warns of embracing Buddhism if BJP, RSS don’t stop communal propag

 
NewsFast Logo