Advertisment

Punnagai Logo

எதிர்க்கட்சி தலைவரே போராட்டத்தை தூண்டிவிடுகிறார்... 

பேருந்து கட்டணம் குறைக்கப்பட்ட பிறகும் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு போராட்டத்தை தூண்டிவிடலாமா?’, என்று மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, பேருந்து கட்டணம் மிகவும் குறைவான அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இக்கட்டான அந்த சூழ்நிலையிலும் கடந்த 7 வருடங்களாக பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை. இத்தனை ஆண்டுகளில் டீசல் விலை, உதிரி பாகங்களின் விலை உயர்ந்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

பேருந்துகள் பராமரிப்பு செலவும் உள்ளடங்கி இருக்கிறது. இத்தனை பிரச்சினைகளையும் சமாளித்து வந்ததாகவும், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில்...ஒரு நாளைக்கு ரூ.9 கோடி என்ற ரீதியில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வந்தது. அதனால் தான் வேறு வழியின்றி மன அழுத்தம் மற்றும் மன வருத்தத்துடன் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அரசு தள்ளப்பட்டது என்று கூறினார். 

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோதும் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது. தற்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையிலேயே கட்டணங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு மேலும் ரூ.2 கோடி என மொத்தம் ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படுகிறது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டாலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்’, என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரே இதுபோல போராட்டத்தை தூண்டிவிடலாமா? இது எந்த விதத்திலும் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.  

 
 

Advertisment

English Summary

minister jeyakumar question to opposition leader stalin

 
NewsFast Logo