Advertisment

Punnagai Logo

வியுகம் அமைக்கும் பிரதமர் நரேந்தர மோடி

நேற்று பிரதமர் திரு,நரேந்திர மோடி தனது அதிகார பூர்வ இல்லத்தில் முக்கிய விருந்தொன்று அளித்தார். பிஜேபி கட்சியின் தலைவர் அமித்ஷா முதல் கேபினட் மந்திரிகள்,கட்சியின் பொது செயலாளர்கள் என பல முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டனர்.

இது வெறும் விருந்தாக மட்டும் அல்லாமல் வரவிருக்கும் தேர்தலுக்கான வியுகம் அமைக்கும் முயற்சியாக, அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.  

திரிபுரா,மேகாலயா,மிசோரம்,மத்திய பிரதேஷ்,சட்டிஸ்கர்,மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள், வர இருக்கும் வருடங்களில் தேர்தலை சந்திக்கும் நிலையில் இருப்பதால் அங்கு கட்சியின் நிலைமை குறித்து எடுக்கும் நிலையப்பாட்டிற்கு இந்த விருந்து தளம் அமைக்கிறது. 

2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இளம் வாக்காளர்களின் ஓட்டு முக்கிய பங்கு வகித்ததாய் பிஜேபி கருதுவதால், வரும் தேர்தல்களிலும் அதனை பெருவதற்கான முனைப்பை கட்சியினர் காட்ட வேண்டும் என தலைமை நினைப்பதாய் தெரிகிறது.

மேலும் அதனை செயல்படுத்த வரும் 18ஆம் தேதியன்று ஒரு செயலியை தொடங்கவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.அதன் மூலம் முதல் முறை வாக்காளர்களுக்கான வாக்கு அட்டையை அவர்களுக்கு பெற்று தரும் முயற்சியும் இலகுவாகும் என நினைக்கிறது பிஜேபி.

மத்திய பட்ஜெட்டுக்கு இரு வார காலமே இருக்கும் தருவாயில் நடந்த இந்த 3 மணி நேர  விருந்து அரசியல் முக்கியத்தும் வாய்ந்ததாய் கருதப்படுகிறது.

 
 

Advertisment

English Summary

modi gave dinner to BJP members

 
NewsFast Logo