Advertisment

Punnagai Logo

எங்கள் சூப்பர்ஸ்டார் மோடி - எச்.ராஜா

திருவாரூரில்  பாஜக   தேசிய செயலாளர் எச்.ராஜா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் , இந்துமத உணர்வுகளை காயப்படுத்தும் வைரமுத்து ஏற்கனவே சீதை ராவணனிடம் சிரித்திருந்தால் ராம-ராவண யுத்தம் நடந்திருக்காது. திரவுபதி சிரிக்காமல் இருந்திருந்தால் மகாபாரத யுத்தம் நடந்திருக்காது என்றார். இப்போது அதே வைரமுத்து  ஆண்டாளையும் விமர்சித்திருப்பது கண்டனத்திற்குரியது.

ரஜினி ஆன்மிகவாதி. கமல் இந்து விரோதி. ஏழுமலையான் கோவில் உண்டியலுக்கு எதற்காக பாதுகாப்பு என்கிற கனிமொழி போன்றோரிடம் இருந்து உண்டியலை காப்பாற்றவே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் போராட்டம் பற்றிய கேள்விக்கு , போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமானால் அரசு கவுரவம் பார்க்காமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பதிலளித்தார்.

ரஜினி அரசியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ,

ரஜினியின் ஆன்மிக அரசியலை பாஜக  கட்சி வரவேற்கிறது. அவருடைய அறிவிப்புக்கு பிறகு அவரை ஆதரிப்போமா என்கிற கேள்விக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. பா.ஜனதா கட்சியும் தேர்தலில் போட்டியிடும். ரஜினியின் அரசியல் வருகையால் பா.ஜனதா கட்சி பயப்படவில்லை. எங்களின் ‘‘சூப்பர் ஸ்டார் மோடி’’தான். அவருக்கு போட்டியாக யாரும் வரமுடியாது.

என்று தெரிவித்தார் .

 
 

Advertisment

English Summary

Our superstar Modi-H.Raja

 
NewsFast Logo