Advertisment

Punnagai Logo

அழுக்கடைந்த தமிழகத்தை ரஜினி சுத்தப்படுத்துவார்- வக்காலத்து வாங்கும் ஆர்.எஸ்.எஸ்

 

ஆர்எஸ்எஸ்-ன் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழான தி ஆர்கனைசரின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்ரி சாரி. இவர் தற்போது பாஜகவின் வெளியுறவுக் கொள்கை பிரிவின் தலைவராக உள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர்  அளித்த பேட்டியிலிருந்து;

ரஜினி அரசியலுக்கு வருவது என்பது பல ஆண்டுகளாக நிலவிவந்த பேச்சாகும். ரஜினி தனது ரசிகர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி, அரசியலில் ஈடுபடும் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. நல்ல ஆளுமையும், சிறந்த நிர்வாகத் திறனும் கொண்டவர்களை அவர் தனது கட்சியில் சேர்க்க வேண்டும்.. ரஜினி பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர். அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். சரியான நேரத்தில் அரசியலில் குதித்துள்ளார்.

கமலஹாசன், சரியான அரசியல் நோக்கமற்ற, தெளிவானப் பார்வையற்ற குழப்பமடைந்த மனிதர். தற்போதைய தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதில் ஐயமில்லை. இதை நிரப்ப நேர்த்தியான சமூக அரசியல் தலைவர்கள் இல்லை என்பதும் உண்மை. இந்தக்கட்டத்தில் ரஜினிகாந்த், தேசிய கொள்கையுடைய, சுயநலமற்ற, சேவை மனப்பான்மை கொண்ட நல்ல மனிதர்களை ஒன்றிணைத்து அரசியல் செய்ய வேண்டும். அப்போது தான் அவர் தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

இன்றைய தமிழகத்தில் ஊழல், கலவர சூழல் மற்றும் பிரிவினைவாதம் உள்ளது. தமிழகத்திற்கு மிகவும் அந்நியமான இவை திராவிடக் கட்சிகளின் பங்களிப்பு ஆகும். இந்த அழுக்கான சூழலில் ஒரு ஆன்மீகவாதியாக ரஜினி தலையிட்டால் தமிழகத்தை சுத்தப்படுத்தி விடுவார்

 

 

தமிழக பாஜகவினர் தங்கள் கட்சியில் ரஜினி இணைய வேண்டும் என விரும்பியது உண்மை. இதற்கு அவர் பதில் சொல்லாமல் இருந்தார். இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒத்து கருத்துள்ள நண்பராக ரஜினி இருந்தார். ஊழலை ஒழிக்க மோடி எடுத்த முயற்சிகளையும் ரஜினி பாராட்டி வந்தார். இந்தகட்டத்தில் பாஜகவும், ரஜினியும் கூட்டணியாக போட்டியிடுவது சாத்தியமே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
 

Advertisment

English Summary

rajini will give corruption-free government - RSS

 
NewsFast Logo