Advertisment

Punnagai Logo

ஓட்டு கேட்டவருக்கு செருப்பு மாலை-  பாடம் புகட்டிய முதியவர் - வீடியோ இணைப்பு 

தனது வார்டில் அடிப்படை வசதி செய்து தராத ஆத்திரத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சேகரிக்க வந்த பா.ஜ.க வேட்பாளருக்கு முதியர் ஒருவர் செருப்பு மாலை அணிவித்த  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மத்திய பிரதேச  மாநிலத்தில் காலியாக உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கு வரும் 17 ஆம்  தேதி தேர்தல் நடக்கிறது.இதில் தஹர் மாவட்டம் தாமோத் பகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடும் தினேஷ் சர்மாக என்பவர்  தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக பிரசாரம் செய்தார்.  சிலர் அவருக்கு மாலை அணிவித்தனர். அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் அருகே கம்பியில் மாட்டியிருந்த செருப்பு மாலையை எடுத்து வேட்பாளர் தினேஷ் ஷர்மாவின் கழுத்தில் போட முயன்றார். 

முதலில் சுதாரித்த தினேஷ் ஷர்மா பொது இடத்தில் பிரசாரம் செய்ய வந்ததால் என்ன செய்வதென்று புரியாமல் செருப்பு மாலையை வாங்கி தானே கழுத்தில் போட்டுக்கொண்டார். உடனே அந்த முதியர் அவரை ஏதோ ஆத்திரத்தில் திட்டினார். இது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பின்னர் நடத்திய விசாரணையில் அந்த முதியர் தனது வார்டில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாமல் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆத்திரத்தில் ஓட்டு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்டு புத்தி புகட்டியதாகத் தெரியவந்தது.

 
 

Advertisment

English Summary

Resident of Madhya Pradesh’s Dhar welcomes BJP leader with garland of shoes

 
NewsFast Logo