Advertisment

Punnagai Logo

சித்தராமைய்யா பொறுப்பற்றவர்... முன்னாள் முதல்வர் எடியூரப்பா விமர்சனம்...

பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவுக்கு எதிராக பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்தில் பங்கேற்ற எடியூரப்பா, உயிரிழந்த கட்சித் தொண்டரின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எடியூரப்பா, இதற்கு முன்பாக 20-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் கொலைக்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். 

கொலை வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் இருந்து சித்தராமைய்யா தவறிவிட்டார் என்றும், அதுவே, இத்தனை கொலைகளுக்கும் காரணம் என்றும் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

ஆனால், இந்த கொலைச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள பெங்களூரு துணை ஆணையர் சி.ரத்தோர், கொலை செய்யப்பட்ட சந்தோஷ், இதற்கு முன்பாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாகவும், அந்த தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார். 

 
 

Advertisment

English Summary

"Siddaramaiah Irresponsible," Says BS Yeddyurappa Over BJP Worker's Death

 
NewsFast Logo