Advertisment

Punnagai Logo

சோடா பாட்டில் வீச எங்களுக்கும் தெரியும்.. ஜீயரின் பேச்சால் சர்ச்சை...

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட கவிஞர் வைரமுத்துக்கு எதிராக, ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் போராட்டம் நடத்தி வருகிறார். நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஜீயர், பிராமணர்கள் அமைதியாக இருப்பதால், அவர்களை சாதாரணமானவர்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

கடவுள்களை மேடைபோட்டு, இனியும் எவரேனும் வசைபாடினால், சோடா பாட்டில்களை எரியவும் தயங்கமாட்டோம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜுயர் கூறினார். 

இதனால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் போராட்டத்தில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., ஜீயர் ஆவதற்கு அடிப்படை தகுதி என்ன என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளதாக கூறினார். 

சோடா பாட்டில் அடிப்பதுதான் ஜீயர் ஆவதற்கு ஒரே தகுதி என்றும் அவர் கடுமையாக விமர்ச்சித்தார். இதனால், திராவிட இயக்கத்திற்கும், ஆன்மீக அமைப்பினர்களுக்கும் இடையேயான மோதல் தமிழகத்தில் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது.

 
 

Advertisment

English Summary

srivilliputtur sadagopan ramanuzar speech spark

 
NewsFast Logo