Advertisment

Punnagai Logo

பாஜகவிற்கு எதிராக பேசிவரும் சத்ருகன் சின்ஹா எம்.பி.யின் வீட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றம்...

திரைப்பட நடிகரும் பாஜகவின் எம்.பியு.மான சத்ருகன் சின்ஹா, கட்சி மேலிடத்தையும், மூத்த தலைவர்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பாஜகவில் உண்மையானவர்களுக்கு மதிப்பில்லை என்றும், அத்வானி உள்ளிட்டவர்களை தற்போதைய பாஜக மேலிடம் ஒதுக்கி வைத்துள்ளது குறித்தும் விமர்ச்சித்திருந்தார்.

அண்மையில் சத்ருகன் சின்ஹா அளித்திருந்த பேட்டியில், இந்திய ஜனநாயகத்தை, வாழைப்பழ ஜனநாயகம் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில், மும்பையில் உள்ள சத்ருகன் சின்ஹாவின் வீட்டின் ஒருபகுதி ஆக்கிரமிப்பு பகுதியாக இருப்பதாகக்கூறி, பிர்கான்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவை விமர்ச்சித்து வரும் சத்ருகன்சின்ஹா, ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார் என்பதை வெளிப்படுத்தும்விதமாக, இந்த செயலில் மகாராஷ்டிர பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 
 

Advertisment

English Summary

starughan sinha mp house encroachment wall demolished by BMC staffs

 
NewsFast Logo