Advertisment

Punnagai Logo

உதயநிதி ஸ்டாலின் மேயர் வேட்பாளரா?

எதிர்க்கட்சித்தலைவர் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் வேட்பாளர் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் பிரவேசம் விரைவில் நடைபெறவுள்ள சூழலில், நடிகர் உதயநிதி ஸ்டாலினும் அரசியலில் தீவிரமாக ஈடுபட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்நிலையில், தற்போது, ஸ்டாலின் அரசியலுக்கு வந்த அதே வழியில் அரசியலில் உதயநிதிக்கு திமுக முக்கியத்துவம் அளிக்க இருப்பதாகவும், இதன் மூலம் வாரிசு அரசியலை திமுக முன்னெடுத்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன. 

ஸ்டாலின் சென்னை மேயராக இருந்ததுபோல், உதயநிதியையும் மேயர் வேட்பாளராக அறிவிக்க திமுகவில் மறைமுக பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஊடகங்களில் தகவல்கள் கசிந்து வருகிறது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மேயருமான மா.சுப்ரமணியன், உதயநிதி தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளது உண்மை என்றும், அவர் மேயர் வேட்பாளர் என்பதில் உண்மையில்லை என்றார். 

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், இனி அடிக்கடி திமுக மேடையில் தன்னை பார்க்கலாம் என்றும் ஒரு அறிவிப்பை கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தீவிர அரசியலில் இறங்குவார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

 
 

Advertisment

English Summary

udayanidhi become chennai mayor candidate?

 
NewsFast Logo