Advertisment

Punnagai Logo

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு எதிராக போராடுவோம்... ராகுல் பிரசாரம்...

மேகாலயா மாநிலத்தில் சட்டப்பேரவை நடைபெறவுள்ள சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது பேசிய ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராடி வருவதாகவும், தொடர்ந்து, இந்த செயல்பாடுகள் இருக்கும் என்றும் கூறினார். 

ஒரே சிந்தனையை நாடு முழுவதும் ஏற்படுத்தவது என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது என்று கூறிய ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ்.-சும், பாஜகவும் இணைந்து நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதாகவும், யார் நினைத்தாலும், காங்கிரசின் தியாகத்தை அழிக்க முடியாது என்று ராகுல் தெரிவித்தார்.

குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கலாச்சாரம், மொழி, வாழ்வியல் முறைகளை மாற்ற ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் முயற்சிப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். 

 
 

Advertisment

English Summary

We are fighting RSS ideology across the nation says rahul

 
NewsFast Logo