Advertisment

Punnagai Logo

அப்ப இருந்த பாஜக இப்போ இல்லை- யஷ்வந்த் சின்ஹா வருத்தம்

 

வாஜ்பாய், அத்வானி உள்பட பலர் இருந்தபோது நன்றாக செயல்பட்ட பா.ஜ.க. இப்போது முற்றிலும் மாறிவிட்டது என அந்தக் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான  யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள விவசாயிகள் பேரணியில்  யஷ்வந்த் சின்ஹா கலந்து கொள்கிறார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

வாஜ்பாய், அத்வானி உள்பட பல்வேறு மூத்த தலைவர்கள் ஆட்சியில் எந்த பொறுப்பில் இருந்தாலும், கட்சியை சேர்ந்த யாராக இருந்தாலும் எந்த முன் அனுமதியும் இன்றி அவர்களை எளிதில் சந்திக்க முடியும்.

இப்போது கட்சியின் மூத்தத்  தலைவர் மற்றும் பிரபலமான தலைவராக இருந்தாலும் கட்சியின் தேசிய தலைவரை முன் அனுமதி பெறாமல் பார்க்க முடிவதில்லை. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

நான் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு 13 மாதமாகி விட்டது. ஆனாலும் எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. ஆட்சியில் உள்ள யாரையும் நான் சந்திக்கப் போவதில்லை. நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை பொது வெளியில் சொல்லப் போகிறேன்.

இந்த நாட்டில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய பிரதேசத்திலும் அவர்களது நிலை மோசமாக உள்ளது. எனவே அவர்களது சார்பில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க உள்ளேன்.

 இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார். 

 
 

Advertisment

English Summary

Yashwant Sinha to take part in farmers' protest in Madhya Pradesh

 
NewsFast Logo