Advertisment

Punnagai Logo

ஆசிய விளையாட்டுப் போட்டி- 9 தங்கப் பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 8வது இடம்

ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீ ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். பந்தய தூரத்தை 1.46 விநாடியில் இந்திய வீரர் மஞ்சித் சிங் கடந்து சாதனை படைத்துள்ளார். அதே போட்டியில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் வெள்ளி பதக்கம் வென்றார்.  மல்யுத்த போட்டியில் இந்தியா 2 பதக்கங்கள் வென்றுள்ளது. மகளிர்கான 52 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பிங்கி பல்ஹரா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

ஆடவருக்கான 52 கிலோ எடை பிரிவில் யாழப்பா ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Image result for indian medal winners in asian games 2018

 இதுவரை இந்திய 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என 50 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் உள்ளது. 9 வது இடத்தில் இருந்த இந்திய அணி 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இருபாலர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 4*400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. தொடர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் முகமது அனாஸ், ஹிமா தாஸ், ராஜீவ் ஆரோக்யா, பூவம்மா ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

 
 

Advertisment

English Summary

Asian Games - 9th place with 9 gold medals

 
NewsFast Logo