Advertisment

Punnagai Logo

ஆசிய விளையாட்டுப் போட்டி.. வெண்கலம் வென்ற சாய்னா..!

ஏற்கனவே ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் வெண்கலம் வென்ற நிலையில், மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி, மற்றொரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில்,  பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தைவான் வீராங்கனை டை ஷு யிங்குடன், இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மோதினார்.

எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய இந்த போட்டியில், தைவான் வீராங்கனையிடம் 21க்கு 17, 21க்கு 14 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் தோல்வியடைந்தார். அரையிறுதிப் போட்டியில் தோற்றாலும், வெண்கலப் பதக்கத்தை சாய்னா நேவால் கைப்பற்றினார்.

இதையடுத்து நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன், பி.வி.சிந்து மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த பி.வி.சிந்து, 21க்கு 17, 15க்கு 21, 21க்கு 10 என்ற செட் கணக்கில், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார்.

இதனால்,ஆசிய விளையாட்டு பேட்மின்டன் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற பி.வி.சிந்து, மேலும் ஒரு பதக்கத்தை இந்தியாவிற்கு உறுதி செய்துள்ளார். இந்நிலையில், இறுதிப் போட்டியில் தைவான் வீராங்கனையை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை பி.வி.சிந்து கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

 
 

Advertisment

English Summary

Asian Games Tournament: Bronze wins Saina

 
NewsFast Logo