Advertisment

Punnagai Logo

ஈட்டி எறிதலில் இந்தியா வரலாற்று சாதனை- முதல்முறையாக தங்கம் வென்றது

ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் முதல்முறையாக இந்தியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவு போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தொலைவுக்கு எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

முதல் வாய்ப்பில் 83 மீட்டர் எறிந்த சோப்ரா, இரண்டாம் வாய்ப்பில் தோல்வி அடைந்தார். இறுதியான 3-வது வாய்ப்பில் 88 மீட்டர் தொலைவுக்கு எறிந்து தங்கத்தை வென்றார்.

இதற்கு முன் கடந்த 1982-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியாவின் குர்தேஜ் சிங் வெண்கலம் வென்றிருந்தார். அதன்பின் ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளது.

2-வது இடத்தை சீன வீரர் லியு குயிஹென் 82.22 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும், பாகிஸ்தான் வீரர் அர்சத் நதீம் 80.75மீட்டர் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவாலாக சீன தைப்பே வீரர் சாவோ சன் செங் விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ 79.81 மீட்டர் எறிந்து 5-வது இடத்தையே பிடித்தார்.

 
 

Advertisment

English Summary

India's historic achievement in lashing-the gold for the first time

 
NewsFast Logo