Advertisment

Punnagai Logo

போட்டிகள் ஒவ்வொன்றிலும் சதம் அடித்துக் கொண்டிருக்க முடியாது - கோலிக்கு ஆதரவாய் சுனில் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், "போட்டிகள் ஒவ்வொன்றிலும் விராட் கோலியால் சதம் அடித்துக் கொண்டிருக்க முடியாது" என கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற இந்திய அணி தொடரை பறிகொடுத்தது. இதனால் கேப்டன் விராட் கோலி மீது விமர்சனம் எழுந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள சுனில் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியையே அதிகம் சார்ந்து இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என விமர்சித்த சுனில் கவாஸ்கர், ஒவ்வொரு முறையும் கோலியால் சதம் அடிக்க முடியாது என்றும் அவரும் மனிதன் தானே என்றும் கூறியுள்ளார். 

 
 

Advertisment

English Summary

Sunil Gavaskar is not in favor of Kohli

 
NewsFast Logo