Advertisment

Punnagai Logo

சச்சினோடு, விராட் கோலியை ஒப்பிடுவதா?’ - "அபத்தம்"...என்கிறார் வீரேந்திர சேவாக்..!

கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்த சச்சின் டெண்டுல்கரோடு விராட் கோலியை ஒப்பிடுவது அபத்தமானது, அவரின் சாதனைகளை எட்டுவதற்கு விராட்கோலி கிரிக்கெட்டில் அதிகமாகப் பயணிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் கடந்த 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்ற மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக எப்போதும் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச அரங்கில் 100 சதங்கள், 34 ஆயிரத்து 357 ரன்கள் என்ற மலைப்புக்குரிய சாதனைகளுக்குச்சொந்தக்காரர். 

Image result for sachinமேலும் 100 சதங்கள், 161 அரைசதங்கள் அடித்து சாதனை படைத்தவர் சச்சின் .

இந்நிலையில் சச்சின் விளையாட்டைப் பார்த்து கிரிக்கெட் கற்றுக்கொண்ட விராட் கோலி, கடந்த 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, தன்னை சிறப்பான வீரர் என்று நிலை நிறுத்திக்கொள்ளத் தவறியதில்லை.

மேலும் தனது பேட்டிங் திறமையைச் சிறப்பாக  வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் 5,994 ரன்கள் சேர்த்து விராட் கோலி 54 சராசரி வைத்துள்ளார். இதில் 23 சதங்கள். ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள், 48 அரைசதங்கள் என 9,799 ரன்கள் சேர்த்துள்ளார் கோலி.

Image result for kohliஇங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய தோல்வி அடைந்த பின், 3-வது போட்டியில் விராட் கோலி அடித்த முத்தாய்ப்பான சதம், பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின், விராட் கோலியை, சிலர் சச்சின் டெண்டுல்கரோடு ஒப்பிட்டு பேசி வந்தனர்.

இந்நிலையில்,இது குறித்து நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அப்போது அவர் கூறுகையில்,

சச்சின் டெண்டுல்கரோடு விராட் கோலியை ஒப்பிட்டதே முதலில் மிகவும் அபத்தமானது. சச்சின் டெண்டுல்கரோடு ஒப்பிட்டுப் பேசுவதற்கே விராட் கோலி நீண்ட காலம் கிரிக்கெட்டில் இன்னும் பயணிக்க வேண்டும். இருவீரர்களை ஒப்பிட்டுப் பேசுவது தவறானது. டெண்டுல்கரோடு சச்சின் ஒப்பிடுவது எனக்குச் சரியானது என்று தெரியவில்லை.

 சச்சின் கிரிக்கெட்டில் எண்ணற்ற பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். அவரின் சாதனை விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்றால், சச்சினோடு விராட் கோலியை ஒப்பிடலாம்.

சச்சின் சாதித்த 100 சர்வதேச சதங்களை எட்டுவதற்கு விராட் கோலி போன்று ஒவ்வொரு வீரர்களும் முயல்கிறார்கள். அதேபோல விராட் கோலியும் முயல வேண்டும். அதேபோல சச்சினின் சாதனைக்கு அருகே வந்து அந்தச் சாதனையை முறியடிக்கும் தகுதிவாய்ந்த வீரர் யாராக இருக்க முடியும் என்று கேட்டால் அது விராட் கோலியாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், கிரிக்கெட் போட்டிகளில் ரன் சேர்க்க வேண்டும் என்கிற வெறி, அதற்குரிய திறமை விராட் கோலிக்கு அதிகமாக இருக்கிறது.

அதற்குரிய வகையில் விராட் கோலி நன்றாகத் தயாராகி வருகிறார், ஒவ்வொரு போட்டியையும் உற்றுநோக்கி விளையாடுகிறார், ஆதலால், அவர் இந்தச் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

என சேவாக் தெரிவித்தார்.

 
 

Advertisment

English Summary

To compare Virat Kohli with Sachin? "-" absurd "says Virender Sehwag!

 
NewsFast Logo