Advertisment

Punnagai Logo

மலைக்க வைக்கும் மணல் கொள்ளை - முதற்கட்டமாக பிடிபட்ட 19 லாரிகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு உரிய ஆவணமின்றி கடத்தி வரப்பட்ட மணல் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

ஆற்று மணலை அள்ள சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து தமிழகத்தில் கடும் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. செயற்கை மணலும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. 

இந்நிலையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு உரிய அனுமதியின்றி தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது.ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் கவரைப்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களை கடந்து சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக இந்த மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த 3 போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் அதிக அளவில் எடுப்பது இல்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி அதிரடி சோதைையில் ஈடுபட்டார்.அப்போது ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 19 லாரிகளை மடக்கிப் பிடித்தார். இதில் 4 லாரிகளின் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.பிடிபட்ட லாரிகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. லாரியி

 
 

Advertisment

English Summary

19 Sand Lorrys Are Seized At Chennai

 
NewsFast Logo