Advertisment

Punnagai Logo

சென்னையில் கார் மோதி 3 பேர் படுகாயம்: பிரபல டாக்டரின் மகனிடம் விசாரணை

பிரபல மருத்துவரான காமராஜ், குழந்தையின்மைக்கு பிரத்யேகமாக சிகிச்சையளிக்கும் மருத்துவமனையை நடத்தி வருபவர். இவரது மருத்துவமனை வடபழனியில் இருக்கிறது. மருத்துவர் காமராஜின் மகனான ஆகாஷ் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையம் அருகே, அதிவேகமாக சொகுசு காரில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், நடைமேடையில் இருந்த இருசக்கர வாகனங்களின் மீது மின்னல்வேகத்தில் மோதி நின்றது.

இந்த சம்பவத்தில், நடைமேடையில் இருந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், படுகாயமுற்ற மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆகாஷை, பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் தீவீரமாக விசாரித்து வருகின்றனர்

 
 

Advertisment

English Summary

3 injured in car collision in Chennai

 
NewsFast Logo