Advertisment

Punnagai Logo

தேர்வு எழுதிய 8,௦௦௦ பேரும், 'பெயில்'..! - வாயை பிளக்கவைக்கும் கோவா வின் கல்வி தரம்...!

பானாஜி: கோவா அரசில் காலியாக உள்ள, 80 அக்கவுண்டன்ட் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்ற, 8,000 பேரும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசில் காலியாக உள்ள, ௮௦ அக்கவுண்டன்ட் பதவிகளுக்கு, இந்தாண்டு ஜனவரி மாதத்தில் தேர்வு நடத்தப்பட்டது. இந்தப் பதவிக்கான குறைந்தபட்ச தகுதியாக, வணிகவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வணிகவியல், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து, ௧௦௦ மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை, 8,000 பேர் எழுதினர். குறைந்தபட்சம், 50 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற முடியும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், அக்கவுண்டன்ட் பதவிக்கான தேர்வில், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

 ''ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது, மாநிலத்தில் கல்வியின் தரம் எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதையே காட்டுகிறது,'' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

8,000 people failed in Exam..! - Quality of education to Goa

 
NewsFast Logo