Advertisment

Punnagai Logo

மகள் வயது பெண்ணோடு.... கூடா நட்பு கேடாய் முடிந்த சம்பவம் ..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 70 வயது முதியவர் ஒருவர் தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.

 ஈஸ்வரி என்ற 40 வயது பெண் ,தென்னை மட்டையில் இருந்து துடைப்பம் தயாரித்து வெளிமாநிலங்களுக்கு, அனுப்பி வந்த முதியவரான பொன்னுசாமி என்பவரிடம் வேலை செய்துள்ளார் . கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஈஸ்வரிக்கும், பொன்னுச்சாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது தவறான தொடர்பாகியது. மேலும்  இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட  தகராறில் பொன்னுசாமி ஈஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்ததையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஜாமீனில் வந்த பொன்னுசாமி, மீண்டும் தனது வீட்டின் முன் படுத்திருந்த ஈஸ்வரியை குடிபோதையில் கட்டையால் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட அச்சத்தில் தனது வீட்டில் பொன்னுசாமியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் தீவீர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 
 

Advertisment

English Summary

affair with daughter aged woman

 
NewsFast Logo