Advertisment

Punnagai Logo

அதிமுக டெபாசிட் வாங்காது - டிடிவி தினகரன் விளாசல் 

தருமபுரி அருகே பாலக்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது என கூறினார்.

தருமபுரி அருகே பாலக்கோட்டில் பேருந்து நிலைய பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பிவிடக் கோரிக்கை  வைத்தனர். 

ஆர்ப்பாட்டத்தில்  டிடிவி தினகரன் பேசும் போது கூறியதாவது:-

"ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் தந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியாது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக ஆட்சியாளர்களின் சாணக்கியத்தனம் செயல்படாது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாகவே இதுவரை ஆட்சி நீடிக்கிறது.

அரசியலுக்காக ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது போகாத மு.க.ஸ்டாலின் இப்போது போகிறார்" என தினகரன் கூறினார்.

 
 

Advertisment

English Summary

AIADMK will not get back deposits

 
NewsFast Logo