Advertisment

Punnagai Logo

அரசியல்வாதிகளை மிஞ்சிய அண்ணா பல்கலை அதிகாரிகள்- புதிய வழிமுறைகளில் மெகா மோசடி

சென்னை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளும், பேராசிரியர்களும் அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் பல்வேறு வழிகளில் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றிய விபரம் வருமாறு;

 பி.இ படித்து வெளியேறும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக கூறி  வேலைவாய்ப்பு முகாம் நடத்தும் திட்டத்தை அண்ணா பல்கலை தனியார் நிறுவனமானத்திற்கு தாரை வார்த்துள்ளது. இதற்காக ஓவ்வொரு ஆண்டும் மாணவர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டுள்ளது.

* அடுத்ததாக பிஇ படித்து முடிக்கும் மாணவர்கள்  வெளிநாடுகளுக்கு சென்று  ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்பு படிக்கச் செல்வதுண்டு. இப்படி செல்லும்  மாணவர்களுக்கு வழங்கும் மைக்ரேஷன்  மற்றும் டிரான்ஸ்கிரிப்ட், சான்றிதழை  காலம் காலமாக அண்ணா பல்கலைகழகமே  மாணவர்களிடம் 200 என கட்டணம் வாங்கி வழங்கி வந்தது. ஆனால் இதையும் தனியார் நிறுவனத்திடம் வழங்கி விட்டனர். இப்போது மைக்ரேஷன், டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ்  வாங்க ஒவ்வொரு மாணவரும் 1500 கட்டணமாக செலுத்திதான் இந்த சான்றிதழ்களை வாங்கி வருகின்றனர்.  இந்த  திட்டத்திலும் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளனர்.

*  அண்ணா பல்கலையில் படித்து வெளியேறும் ஒவ்வொரு மாணவரும் வெளியில் அரசு மற்றும் தனியார் என எந்த நிறுவனத்தில் வேலைக்கு சென்றாலும் அந்த நிறுவனம் மாணவர்களிடம் நம்பகத்தன்மை சான்றிதழ் கேட்கும்.இந்த சான்றிதழை அண்ணா பல்கலைதான் வழங்கி வந்தது. ஆனால் 2013க்குப் பிறகு இந்த பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர். இதற்கும் ஒவ்வொரு மாணவர்களிடம் ₹1000 கட்டணம் வசூல் செய்கின்றனர். இந்தபணிகள் அனைத்தும்  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் கீழ்தான்  வருகிறது. ஆனால்  இறுதி முடிவை எடுப்பது துணைவேந்தரின் கையில்தான் உள்ளது.

 இந்த முறைகேடுகள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 
 

Advertisment

English Summary

Anna's superiors over the politicians - mega fraud in new ways

 
NewsFast Logo