Advertisment

Punnagai Logo

உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? - ராகுல்காந்திக்கு சவால் விடும் சமூக ஆர்வலர்!

வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வெளிநாடு சென்றுவிட்ட  வைர வியாபாரி நிரவ் மோடியை, டெல்லியில் உள்ள ஹோட்டலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2013-ம் ஆண்டில் சந்தித்ததாக சமூக ஆர்வலர் சேஷாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து உண்மை கண்டறியும் சோதனை நடத்த தயாரா என்று ராகுல் காந்திக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தான் வெளிநாடு செல்வதற்கு முன்னதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, நிதியமைச்சர் பதவியிலிருந்து அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாடு செல்வதற்கு முன்னதாக பிரதமரை சந்தித்ததாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா குற்றம்சாட்டினார். 

தற்போது மேலும் ஒரு திருப்பமாக , ட்விட்டரில் பதிவிட்டுள்ள சமூக ஆர்வலர் சேஷாத் பூனவல்லா, டெல்லியில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிரவ் மோடியை, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராகுல் காந்தி சந்தித்ததாக தெரிவித்தார்.

இதனை தான் பார்த்ததாகவும் அவர் கூறினார். இதற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், இதேபோல, ராகுல் காந்தி தயாரா என்றும் சேஷாத் சவால் விடுத்துள்ளார்.

 
 

Advertisment

English Summary

Are you ready for a true diagnostic test? - Social activist challenging Rahul Gandhi

 
NewsFast Logo