Advertisment

Punnagai Logo

"முட்டை" யாய் இருங்கள்...கூமுட்டையாய் அல்ல...

பேரறிஞர் அண்ணா அவர்கள், தன் கட்சி தொண்டர் ஒருவர் வீட்டில் உணவருந்த சென்றார்.தொண்டரின் குடும்பத்தினர் மிகுந்த மரியாதையுடன் உணவினை பரிமாற, முதலில் வாழை இல்லை போட்டு , அதன் ஓரத்தில் ஒரு முட்டையையும்  , ஒரு அப்பளத்தையும் வைத்துவிட்டு மின் விசிறியையும் சுழல விட்டனர்.

மின் விசிறியின் வேகத்தில் காற்று வெகுவாய் வீச, அப்பளம் பட பட வென ஆடியது. முட்டை மட்டும் அப்படியே இருந்தது .

இதனை பார்த்த அண்ணா , அருகிலிருந்தவர்களிடம் கூறினார், "நாலணா முட்டை அப்படியே இருக்கிறது, காலணா அப்பளம் எப்படி ஆட்டம் போடுகிறது பாருங்கள் " என்றார் .

வாழ்க்கையிலும் சிலர் அப்படிதான் .

சில விஷயங்களை அரைகுறையாய் தெரிந்துகொண்டு , எல்லாம் தெரிந்தது போல் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

விஷயம் தெரிந்தவர்கள் அடுத்தவரின் கருத்துக்கு காது கொடுத்து , அதில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா .? .என அமைதியாய் இருப்பார்கள்..

 
 

Advertisment

English Summary

Be "Calm" ... not as idiot ...

 
NewsFast Logo