Advertisment

Punnagai Logo

பிக் பாஸ் – 2  ஷோவில் இணைந்த இரு பிரபலங்கள்… யார் தெரியுமா..?


நடிகர் கமல் தொகுத்து வழங்கும் `பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது சீசன் வரும் 17-ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இரண்டாவது சீசனில் பங்குபெறும் பிரபலங்கள் குறித்து ஆன்லைனிலும், ஆப்லைனிலும் விவாதங்கள் சூடுபறந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் – 2வில் பங்குபெறப்போகும் 15 பேரில் நடிகை ஜனனி ஐயர், தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மமதி சாரி ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனனி ஐயர்:
`அவன் இவன்’ படம் மூலம் இயக்குநர் பாலாவால் தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர். தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துவரும் இவர், நடிப்பதற்கு முன் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தார். முதல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னரே இவர் 100-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் தலைகாட்டிவிட்டார். `பிக் பாஸ்’ சீசன் -2வின் இறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் பட்டியலில் இவரது பெயரும் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

மமதி சாரி:
தனித்துவமான உச்சரிப்பு, கொஞ்சும் குரல் என சின்னத்திரையை ஆட்சி செய்த மமதி சாரி, ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் தற்போது `வாணி ராணி’ தொடரில் நடித்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய `ஹலோ தமிழா’, `சமையல் சமையல்’, `செல்லமே செல்லம்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடம் பிரபலம். 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் அவர் சின்னத்திரை பணியிலிருந்து ஒதுங்கியிருந்தார். சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் இவரும் `பிக் பாஸ்’ போட்டியாளர்களில் ஒருவர் என்கிறார்கள்.

 
 

Advertisment

English Summary

Big Boss -2 Two Celebrities in the Show ..

 
NewsFast Logo