பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கிறது. கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ், ஏற்கனவே தமிழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி, மக்களின் கவனத்தை கட்டிப்போட்ட பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோ. இதன் இரண்டாவது சீசன் தான் நாளை உலகெங்கிலும் ஒளிபரப்பாக இருக்கிறது.
தொடங்குவதற்கு முன்பே மக்கள் மத்தியில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிகழ்ச்சி. தற்போது வெளியாகி இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரமோவில், கமலஹாசன் பிக் பாஸ் வீட்டினுள் இருப்பது போன்ற காட்சிகள், வெளியாகி இருக்கின்றன.
அவர் வழக்கமாக பிக் பாஸ் வீட்டினுள் நுழைபவர்கள் அணியும் மைக்கை அணிந்து கொண்டு பிக் பாஸ் வீட்டினை வலம் வரும் காட்சிகள் இந்த பிரமோவில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் பிக் பாஸ் குறித்து இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் இப்போது கிடைத்திருக்கிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை யார்? யார்? எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள்? என மக்கள் மனதில் சில கேள்விகள் இருக்கின்றன. பவர் ஸ்டார் தான் பிக்பாஸில் கலந்து கொள்ளப்போவதை அவரே அறிவித்திருக்கிறார்.
அதே போல தற்போது பிக் பாஸில் கலந்து கொள்ளப்போகும், இன்னொரு பிரபலம் யார்? எனும் தகவல் வெளியாகி இருக்கிறது. விஜயுடன் ஜில்லா படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த மஹத் தான் அந்த பிரபலம்