Advertisment

Punnagai Logo

 பிக்பாஸ் 2 – மனைவியுடன் செல்கிறார் “தாடி” பாலாஜி…!

விஜய் டிவி-யின் ஆஸ்தான ஆர்ட்டிஸ்ட் தாடி பாலாஜியும் அவர் மனைவி நித்யா பாலாஜியும்தான் அந்த இருவர்.

‘தாடி’ பாலாஜி விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு’, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ போன்ற ஷோக்களில் பட்டை கிளப்பியவர். நித்யாவை காதலித்து மணந்துகொண்டவர். பாலாஜி மூலம் நித்யாவும் விஜய் டிவியின் சில ஷோக்களில் தலைகாட்டினார். டி.ஆர் மற்றும் நடிகை சதா இருவரும் நடுவராக இருந்த `ஜோடி’ ஷோ ஷூட்டிங் நடந்தபோதுதான் கணவன் – மனைவியான இருவருக்குமிடையே பிரச்னை என்கிற விஷயமே வெளியில் தெரிந்தது. சில நாள்களில் பாலாஜிமீது போலீஸில் புகார் அளித்தார் நித்யா. இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இவர்கள் இருவரையும் சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தார் சிம்பு. அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மகள் போஷிகாவுடன் தனியாக வாழும் நித்யா, பாலாஜியை நேருக்கு நேர் சந்தித்தே சில வருடங்களாகிவிட்ட நிலையில், தற்போது, இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார்கள். பாலாஜிக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நித்யா மறுத்ததாகவும் தொடர்ந்து பேசி, கன்வின்ஸ் செய்து கலந்துகொள்ளச் சம்மதிக்க வைத்ததாகவும் தெரிகிறது.

எப்படியோ ஒன்றாக வசித்த தம்பதி சில வருட பிரிவுக்குப் பிறகு, 100 நாள்கள் ஒரே வீட்டில் தங்கப்போகிறார்கள். அந்த வீட்டைவிட்டு வெளியே வருகிறபோது இருவரும் சேர்ந்திருப்பார்களா. பிக் பாஸ் பிரியர்களோ, ‘நூறாவது நாளை விடுங்க, ஒவ்வொரு நாளும் இவங்களோட ரியாக்‌ஷனுக்காகவே நாங்க காத்திருக்கிறோம்’ என்கிறார்கள்.

 
 

Advertisment

English Summary

Bigboss 2 - balaji and his wife

 
NewsFast Logo