Advertisment

Punnagai Logo

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர்..! டீ விற்று காலம் தள்ளும் அவலம்..!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர் ஒருவர் டீக்கடையில் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார்.

கைப்பந்து ஆட்டக் களத்தில், காலாலும், தலையாளும் பந்தைத் தட்டி எதிர்புறத்துக்கு வீசி விளையாடும் விளையாட்டு செபக் டக்ரா (Sepak Takraw) என அழைக்கப்படுகிறது.

 இந்த விளையாட்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெற்று வெண்கலம் வென்றுதந்த அணியில் இடம் பெற்று இருந்தவர்  ஹரீஷ்குமார்.

இவர் தமது குடும்ப பொருளாதாரத்திற்காக தந்தையின் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். 

மேலும் தமக்கு ஒரு வேலையை வழங்கினால் குடும்ப சூழலை சமாளிப்பேன் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது டீக்கடையில் வேலையை முடித்துவிட்டு பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை மட்டுமே தினந்தோறும் பயிற்சி எடுப்பதாகவும் ஹரீஷ்குமார் தெரிவித்துள்ளார். 

 
 

Advertisment

English Summary

Bronze medalist in Asian Games Tea Selling Duration

 
NewsFast Logo