Advertisment

Punnagai Logo

கட்டண உயர்வு புதிய கணக்கு சொல்லும் தமிழக அரசு... 

சென்னையில் மாநகர சாதாரண பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ம், அதிகபட்சம் ரூ.23 ஆகவும், விரைவு பேருந்தில் குறைந்தபட்சம் ரூ.8-ம், அதிகபட்சம் ரூ.35 ஆகவும், சொகுசு பேருந்தில் குறைந்தபட்சம் ரூ.12-ம் அதிகபட்சம் ரூ.48-ம், குளிர்சாதன பேருந்தில் குறைந்தபட்சம் ரூ.25-ம் அதிகபட்சம் ரூ.125 ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டது.

இதே போல் வெளியூர் மற்றும் விரைவு பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மேலும் பயணிகளிடம் இருந்து பயணக் கட்டணத்துடன் சேர்த்து விபத்து மற்றும் சுங்க வரியும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி சாதாரண பேருந்தில் ரூ.1-ம், குளிர்சாதன பேருந்தில் ரூ.2-ம் சேர்த்து கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச கட்டணத்துடன் பயணிகளிடம் இருந்து கூடுதலாக கட்டணம் வரம்புக்கு ஏற்ப ரூ.1,2,3,4,5, 6,7,8,10 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் மாநகர பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.6 ஆக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

புறநகர் பஸ்களில் தூரத்துக்கு ஏற்ப விபத்து மற்றும் சுங்க வரியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த புதிய விபத்து-சுங்க வரி கட்டணம் விதிப்பினால் இனி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களில் உயிர் இழப்பு மற்றும் பெரிய, சிறிய காயம் அடைபவர்களுக்கு, இழப்பீட்டுத் தொகை போக்குவரத்து கழகங்களால் உடனடியாக வழங்கப்படும்.

இதற்காக போக்குவரத்து கழகங்களில் விபத்து இழப்பீடு, விபத்து தவிர்த்தல் மற்றும் சுங்க கட்டண நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் விபத்து மற்றும் சுங்கவரி கட்டணம் இந்த நிதியத்தில் சேர்க்கப்படும். இந்த நிதியத்தில் இருந்து விபத்து இழப்பீட்டுத் தொகை மற்றும் சுங்க கட்டணத்துக்கு வழங்கப்படும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 முதல் 15 வரை வயது வரம்பு உடையவர்களுக்கு இரண்டரை லட்சமும், 16 முதல் 60 வயது உடையவர்களுக்கு 5 லட்சமும், 60 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டரை லட்சம் வழங்கப்படும்.

சிறுகாயம்-I, சிறுகாயம்-II, மருத்துவமனையில் 2 நாட்கள் வரை சிகிச்சை பெற்றவர்களுக்கு-ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், தலை காயம் மற்றும் நிரந்தர உறுப்பு இழப்பு ஏற்படுபவர்களுக்கு- ரூ.5 லட்சமும், பெரிய காயம் மற்றும் எலும்பு முறிவுக்கு மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சை பெற்றவர்களுக்கும், எலும்பு முறிவுக்கு மருத்துவ மனையில் 4 நாட்கள் சிகிச்சை பெறுபவர்களுக்கு-ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரையிலும் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
 

Advertisment

English Summary

bus ticket charge increase... tamilnadu govt clarify

 
NewsFast Logo