Advertisment

Punnagai Logo

பேருந்து கட்டணம் சிறிய அளவில் குறைப்பு....

அண்மையில் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை 60 சதவீத அளவிற்கு உயர்த்தி அறிவித்தது. இதனால், அரசுப்பேருந்துகளை பொதுமக்கள் பெரும்பாலும் புறக்கணித்தனர். இதனால், எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போக்குவரத்து கழக அதிகாரிகள் திணறினர். 

இந்நிலையில், தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேருந்து கட்டண உயர்வு குறைப்பு குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார். 

அவர் கூறிய சிறிது நேரத்திலேயே, தமிழ்நாடு அரசு பேருந்து கட்டண உயர்வை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, சாதாரண பேருந்துகளின் கட்டணங்களில் கிலோமீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 2 பைசா குறைத்து 58 பைசாவாக கட்டணம் நிர்ணயித்தது. 

நகர மற்றும் மாநகரப் பேருந்துகளின் கட்டணங்கள் குறைந்தபட்சமாக உள்ள கட்டணம் 5 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

விரைவுப்பேருந்துக் கட்டணம் 80 பைசாவில் 5 பைசா குறைத்து 75 பைசாக்காளாக நிர்ணயம். குளிர்சாதன பேருந்துகளின் கட்டணம் 140 பைசாவில் 10 பைசா குறைத்து, 130 காசுகளாக கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகவும்,  இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடி இழப்பு ஏற்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த கட்டண உயர்வு என்பது மிகவும் குறைந்த அளவில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக சார்பில் நாளைய தினம் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சிகளையும், பொதுமக்களையும் திசைதிருப்பவே இந்த அறிவிப்பு என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 
 

Advertisment

English Summary

bus ticket charge small size decreased tamilnadu

 
NewsFast Logo