Advertisment

Punnagai Logo

வீட்டிலும் செய்யலாம் .."பன்னீர் டிக்கா"

பொதுவாக வீட்டில் சமைத்து பார்ப்பது ரிஸ்க் என ஒதுக்கிவிடும் உணவு வகைகளில் ஒன்று பன்னீர் டிக்கா . ஆனால் உண்மையில் மிக எளிதான செய்முறை கொண்ட உணவு அது . நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

தேவையானவை :

பன்னீர் - 250 கிராம் 

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் 

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 

பிரெட் தூள் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை :

முதலில் பன்னீரை நீளமாக நறுக்கி கொள்ளவும் . பின் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு , மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும்.

பின், அதில் நறுக்கி வைத்திருந்த பன்னீர் துண்டுகளை போட்டு பிரட்டி, 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் , அந்த பன்னீர் துண்டுகளை, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு , பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான பன்னீர் டிக்கா ரெடி..

 
 

Advertisment

English Summary

Can be done at home .. "Pannir Tikka"

 
NewsFast Logo