Advertisment

Punnagai Logo

கொடநாடு சம்பவத்தில் எனக்கு தொடர்பில்லை - முதல்வர் பழனிசாமி விளக்கம் 

கொடநாடு மர்ம மரணங்கள் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றும், வீடியோ தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஏற்பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

"கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ ஆவணம் குறித்த புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது; அதனை வன்மையாக கண்டிக்கிறோம்

தவறான  செய்தி வெளியிட்டவர்கள், வீடியோ விவாகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது விரைவில் கண்டறியப்படும்.
கொடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவல்களை பரப்புகின்றனர்" என கூறினார்.

 
 

Advertisment

English Summary

CM clarifies about Kodanad incidents

 
NewsFast Logo