அதிமுகவில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகள் இணைப்புக்குப்பின்னர் புதிதாக கொண்டுவரப்பட்ட சட்ட விதிகளை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி அளித்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி மனு அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கு பிறகு, அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
இதை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தில், கே.சி.பழனிச்சாமி, மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக சட்ட விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரியுள்ளார் கே.சி.பழனிசாமி.
பழனிச்சாமி, மனுவுக்கு தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக உறுப்பினராகவே இல்லாத பழனிசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் மனு அளித்துள்ளார்.