Advertisment

Punnagai Logo

இருமல் பிரச்சனைக்கு சென்ற பெண் பேராசிரியர் உயிரிழப்பு - தவறான அறுவை காரணமா..? வடபழனி விஜயா மருத்துவமனை மீது புகார்...!

சென்னையில்  கல்லூரி பேராசிரியர் தனது  இருமல் பிரச்சனைக்காக சென்ற பொது மருத்துவமனையில்  தவறான அறுவை சிகிச்சை செய்ததால் அவர் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

சென்னை அம்பத்தூர் பானு நகரை சேர்ந்தவர் கோமகன், இவரது மனைவி நிர்மலா ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். சில நாட்களாக தொடர்ந்து இருமல் தொல்லையால் அவதிப்பட்டவரை சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதித்துள்ளனர். பேராசிரியர் நிர்மலாவுக்கு நுரையீரலில் கட்டி இருப்பதாகவும் அவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு உள்ளனர்  ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் அறுவை சிகிச்சையை அலட்சியமாக மருத்துவர்கள் மேற்கொண்டதே அவர் உயிரிழப்புக்கு காரணமென பேராசிரியர் நிர்மலாவின் கணவர் கோமகன் குற்றம்சாட்டியுள்ளார்

அறுவை சிகிச்சை முடிந்து 2 நாட்கள் அவரது உடல் நிலை குறித்து தகவல் தெரிவிக்காமல் ஏதேதோ காரணங்கள் கூறி மருத்துவர்கள் மறைத்துவிட்டு இறுதியில் உயிரிழந்து விட்டதாக கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ள பேராசிரியர் நிர்மலாவின் குடும்பத்தினர் இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் 

இதையடுத்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த பேராசிரியை நிர்மலாவின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது குறித்து போலீசார் கூறுகையில்,"தவறான சிகிச்சை என்றால் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளனர்

 
 

Advertisment

English Summary

death of the professor - is the cause of the wrong operation?

 
NewsFast Logo