Advertisment

Punnagai Logo

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது  

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை வருகிற 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும் மாலை ஸ்டாலினை திமுக எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளனர். 

எம்.எல்.ஏக்களில் பலர் திமுக மாவட்ட செயலாளராகவும் பலர் உள்ளனர். இதனால், நாளைய கூட்டத்தில் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

 
 

Advertisment

English Summary

DMK MLAs meet tomorrow

 
NewsFast Logo