Advertisment

Punnagai Logo

45 பயணியரை காப்பாற்ற வண்டியை ஓரம் கட்டிய டிரைவர் - உயிர் இழந்த சோகம் ..!

சேலம்: மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அரசு பஸ்சை ஓரமாக நிறுத்தி, 45 பயணியரின் உயிரை காப்பாற்றிய டிரைவர் உயிரிழந்தார்.

முன்னதாக சேலத்திலிருந்து, புதுச்சேரிக்கு நேற்று அதிகாலை, 4:45 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகத்தைச் சேர்ந்த கிருஷ்ண சுந்தர ஆனந்தம், 41, பஸ்சை ஓட்டினார்.

காலை, 5:00 மணிக்கு பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே, டிரைவர், பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே நெஞ்சை பிடித்தபடி அப்படியே சாய்ந்தார்.கண்டக்டர், சக பயணியர் உதவியுடன், டிரைவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர்.போக்குவரத்துக் கழக அதிகாரிகள், மாற்று டிரைவர் மூலம், பஸ்சை இயக்க நடவடிக்கை எடுத்தனர். மாரடைப்பு ஏற்பட்டும், 45 பயணியரின் உயிரை காப்பாற்றிய டிரைவரின் செயல், அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 
 

Advertisment

English Summary

Driver who save the passengers - The tragic loss of life ..!

 
NewsFast Logo