முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஊகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியிட, விவாதங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எச்சரித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (டிச. 5) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது, அவரது மரணம், அது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஆகியவை குறித்து ஊகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியிடவும், தொலைக்காட்சிகளில் விவாதங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Fake news on J death banned