Advertisment

Punnagai Logo

வினோத விண்வெளி ஹோட்டல் - ரூம் வாடகை கேட்டு மயக்கமடையாதீர்கள்! 

விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் வினோதமான ஹோட்டலான அரோரா ஹோட்டலுக்கு சென்று தங்கி வருவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருந்தினரும் சிறப்பு பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

பூமியில் இருப்பதுபோல் விண்வெளி ஹோட்டலில் நடந்துசெல்ல முடியாது. அங்கு புவி ஈர்ப்பு விசை கிடையாது என்பதால் பறந்தபடியேதான் இருக்கவேண்டும். தூங்கும்போது பெல்ட்டால் கட்டிக்கொண்டுதான் தூங்க வேண்டும். தண்ணீரை ஊற்றி குளிக்க முடியாது. வெறும் டவல் பாத் மட்டுமே சாத்தியம். 

ஹோட்டலுக்கு வெளியில் 250 டிகிரி வெப்பமோ அல்லது மைனஸ் 250 டிகிரி குளிரோ நிலவும் என்பதால் ஜன்னலை திறந்து காற்று வாங்க முடியாது. 

இங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் என்ற நிறுவனம் 2021-ம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை தொடங்க இருக்கிறது. அந்த ஹோட்டலுக்கு 2022-ம் ஆண்டு முதல் விருந்தினர்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 320 கி.மீ தொலைவில் அமைக்கப்படும் இந்த ஹோட்டலில் விருந்தினர்கள் 12 நாட்கள் வரை தங்கலாம். மேலும் பூமியில் சூரியன் உதிப்பது மற்றும் மறைவது எப்படி என்பது போன்ற நிகழ்வுகளையும் விருந்தினர்கள் நேரடியாக பார்க்க முடியும்.

இந்த விண்வெளி அரோரா ஸ்டேஷன் ஹோட்டலில் தங்கி உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவை, தற்போது ஓரியான் ஸ்பேன் நிறுவனம் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. 

விண்வெளி ஹோட்டலுக்கு செல்ல விரும்புவோர் 50 லட்சம் ரூபாய் முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என ஓரியான் ஸ்பேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓரியான் ஸ்பேன் நிறுவனத்தின் விண்வெளி ஹோட்டலில் தங்கியிருக்க ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 6 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. 12 நாட்களுக்கு 72 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தக்கூடிய கோடீஸ்வரர்கள் வினோதமான ஹோட்டலான அரோரா ஹோட்டலுக்கு சென்று தங்கி வரலாம். 

தமிழ்நாட்டில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் யாரெல்லாம் இந்த ஹோட்டலுக்கு புக் செய்துள்ளனர் என்ற தகவல் விரைவில் வெளியாக கூடும் 

 
 

Advertisment

English Summary

First luxury space hotel to open in 2021

 
NewsFast Logo