Advertisment

Punnagai Logo

சென்னையில் விநாயகர்  சிலை ஊர்வலம் 16-ந்தேதி நடக்கிறது

 

விநாயகர் கோவில்களில் மின் விளக்கு அலங்காரம், தோரணம் என விநாயகர் சதுர்த்தியால் சென்னை நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

சென்னையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்தனர். விநாயகர் சிலை ஊர்வலம் வருகிற 16-ந்தேதி நடக்கிறது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல விதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.


விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 2,500 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்து முன்னணி சார்பில் சிறிய மற்றும் பெரிய சிலைகள் என 5 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பிலும், பல இடங்களில் குடியிருப்போர் சங்கம் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

தெருக்கள், வீதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பஜனை நடைபெற்று வருவதால், தெருக்கள் திருவிழா போல் களை கட்டியுள்ளது. ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான விநாயகர் சிலை ஊர்வலம் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து, பூஜையை பக்தர்கள் நிறைவு செய்வார்கள்.

இதுகுறித்து இந்து முன்னணி சென்னை மாநகர அமைப்பாளர் ஏ.டி.இளங்கோவன் கூறியதாவது:-

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை சென்னையின் பல பகுதிகளில் நாங்கள் வைத்திருக்கிறோம். எம்.ஜி.ஆர். நகரில் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

வருகிற 16-ந்தேதி மதியம் 1.30 மணிக்கு இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடைபெறும். திருவல்லிக்கேணியில் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கலந்து கொள்வார். இது தவிர சென்டிரல் முத்துசாமி பாலத்தில் இருந்தும், வள்ளுவர்கோட்டத்தில் இருந்தும் ஊர்வலம் தொடங்க இருக்கிறது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் என்று  தெரிவித்தார்.

 
 

Advertisment

English Summary

Ganesh idol procession going on 16 in Chennai

 
NewsFast Logo