Advertisment

Punnagai Logo

நல்ல சந்தர்ப்பம் ..விலை குறைந்தது..கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 22-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய வெளியீட்டுக்கு முன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.67,500 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நோட் 8 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.55,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் வலைத்தளம் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புதிய விலையில் கேலக்ஸி நோட் 8 விற்பனை செய்யப்படுகிறது. 

விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.4,000 வரை கேஷ்பேக் பெற முடியும். கேலக்ஸி நோட் 8 டூயல் பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக அமைந்தது. இதன் பிரைமரி கேமரா யூனிட் இரண்டு 12 எம்பி கேமராக்கள், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்

- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)

- 6 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ப்ளூடூத் 5.0, எல்டிஇ

- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- 3300 எம்ஏஎச் பேட்டரி

- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது

 
 

Advertisment

English Summary

Good opportunity .. Rate decreased Galaxy note smartphone

 
NewsFast Logo