Advertisment

Punnagai Logo

அரசுப் பள்ளிகள் - அக்கறை காட்டும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் .!

மூடப்படும் நிலையில் இருக்கும் அரசுப்பள்ளிகளை சீராக்கும் முயற்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் களம் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "கல்வி என்பது எல்லோருக்குமான அடிப்படை தேவை. அது எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் நிறைய அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே கல்வி வியாபாரமாக மாறி இருக்கிறது.

இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். உலக அளவில் சாதித்த பல தமிழர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். சமீப காலமாக 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர்.

நகரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியாக சென்னையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி, யு.கே.ஜி சொல்லித் தரும் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுள்ளேன். எனது ரசிகர்கள் மற்றும் அயல்நாட்டில் இருக்கும் தமிழர்கள் இதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளியை தத்தெடுத்து உதவிட வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 
 

Advertisment

English Summary

Government Schools - Concerned Actor GV Prakash

 
NewsFast Logo