Advertisment

Punnagai Logo

மீண்டும் தலை தூக்கும் ஹைட்ரோகார்பன் பிரச்சனை..! - உரிமதிற்கு பிறகு ஆய்வை தொடங்க போவதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு ..!

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களைக் கண்டறிந்து எடுக்க விடப்பட்ட ஏலத்தை வேதாந்தா நிறுவனம் எடுத்துள்ளதையடுத்து  இதற்கான ஒப்பந்தம் ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்துடன் (டிஜிஎச்) விரைவில் கையெழுத்தாகவுள்ளது. 

அதனையத்தொடர்த்து  நிலஆய்வு செய்யப்பட உள்ளது. அதற்கு முன்பாக மத்திய அரசிடம் 25, தமிழக அரசிடம் சுமார் 15 உரிமங்கள் பெற வேண்டி உள்ளது. இதில் மாசு கட்டுப்பாடு ஆணையங்களின் உரிமங்களும் அடங்கும். இவற்றை பெற்ற பின்பே தமது நிலஆய்வை தொடங்குவதாக வேதாந்தா உறுதி கூறியுள்ளது.

இது குறித்து வேதாந்தா நிறுவன தரப்பில் சொல்லப்படுவதாவது :

மத்திய அரசிடம் பெற வேண்டிய 25 வகை உரிமங்களை ‘சிங்கிள் விண்டோ’ முறையிலும்,இதே முறையில், மாநில அரசுகளின் உரிமங்களையும் பெற முயற்சி செய்வோம். ஏற்கனவே ராஜஸ் தானின் பார்மேர் மாவட்டத்தில் 38 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணியை வேதாந்தா செய்து வருகிறது. இதில் பெரிய இடமான மங்களா பிராசஸிங் டெர்மினல் கடந்த ஆகஸ்ட் 29-ல் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Image result for hydrocarbon in tamilnaduஇங்கு பிரச்சினையின்றி, எந்த இழப்பும் ஏற்படாமல் அப்பணி நடைபெறுவதை தமிழகத்திலும் எடுத்துக் கூறி பணியை தொடங்குவோம். இதற்காக மக்கள் சார்பில் உண்மை கண்டறியும் குழுக்கள் அமைந்தால் அவற்றுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து இழப்பில்லை என்பதை ஆதாரங்களுடன் விளக்குவோம்’ எனத் தெரிவித்தனர்

முன்னதாக தமிழகத்தில் காவிரி டெல்டாவின் முக்கிய பகுதியில் மீத்தேன் எடுக்க அதன் ஆட்சியர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு தடை விதித்து அரசாணை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு மத்திய அரசு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க விடப்பட்ட ஏலத்தில் ஹைட்ரோகார்பனுடன் மீத்தேனும் அடங்கியுள்ளது. இதன் மீது வேதாந்தா சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இரண்டு இடங்களில் வேதாந்தா எடுத்த ஏலங்கள் ’ஓஏஎல்பி’ எனும் பல ஏக்கர் அளவிலான பெரிய வகையாகும். இதன் மதிப்பீட்டை நிலஆய்வுப்பணிகள் முடிந்த பின்பே கூற முடியும். இதுபோல், நிலஆய்வு செய்யப்படாத இடங்களை மத்திய அரசு டெண்டர் விடுவது புதிதல்ல. ஏற்கனவே சுமார் பத்து வருடங்களுக்கு முன் வேதாந்தா உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களுக்கு டெண்டர் அளித்து ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன

தமிழகத்தில் வேதாந்தா, காவிரி டெல்டா மாவட்டங்களில் எங்கு  எடுத்தாலும் அந்த குறிப்பிட்ட இரண்டு இடங்கள் எது என்பது நிலஆய்விற்கு பின்னரே தெரியவரும். அதன் பிறகு அங்கு வேதாந்தாவிற்கு நில கையகப்படுத்தும் பணிகளை மத்திய அரசு முன் நின்று செய்ததர இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 
 

Advertisment

English Summary

Head back lifting hydrocarbon problem ..! - Vedanta company announces to start studying after the franchise ..!

 
NewsFast Logo