Advertisment

Punnagai Logo

எப்படி இருக்கு சென்னை ரியல் எஸ்டேட் தொழில்..?

மந்தமாகி இருந்த ரியல் எஸ்டேட் தொழில் இப்பொது ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மூச்சுவிடுகிறது ஆனால் இதுவே ஒரு நல்ல திருப்புமுனை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

1. தேவைக்கு மட்டும் ..முதலீடு அல்ல .!

Image result for buying house in chennai

வருமான வரி கணக்கு , சரியாகவோ அல்லது போலியாகவோ காட்டி  வீடு வாங்க நினைப்பவர்களுக்கு சென்னை ரியல் எஸ்ட்டேட் சந்தை சாதகமாக அமைந்தது. மற்றவர்களுக்கு அப்படி இல்லை . ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீடு வாங்குவது தங்கள் வேலைக்கு, வியாபாரத்துக்கு அவசியமானது என்கிற நிலைமையில் உள்ளவர்கள் மட்டும் இடமோ, வீடோ வாங்குகிறார்கள். மற்றபடி முதலீடாக நினைத்து வாங்குவோரின் சதவிகிதம் மிக மிக குறைவே..

2. நஷ்டப்படுத்தாத புறநகர் பகுதிகள் ..

சென்னையின் புறநகர்களான மேடவாக்கம், ஆவடி, தாம்பரம், போரூர், பெரும்பாக்கம் , போன்ற இடங்களில் மனைகள் வாங்குவது உங்கள் முதலீட்டுக்கு குந்தகம் செய்யாது என்கிற நிலைமை உள்ளது. குறிப்பாக ஆவடியை சுற்றிய 7 கி .மீ க்கு உட்பட்ட பகுதிகள் சிறப்பானவை.

 3. எப்பவும் போல் தென் சென்னை முன்னணி..

முந்தைய வருடங்களை போல ஐடி நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் தென் சென்னை பகுதியில் வீடு தேடுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். மேலும் செய்த முதலீட்டுக்கு வட்டி கட்ட முடியாத கட்டுமான நிறுவனங்கள் விலையை குறைத்தால் கொஞ்சம் நியாமான விலையிலும் அபார்ட்மெண்டுகள், மற்றும் டுப்லெக்ஸ் வீடுகள் கிடைக்கின்றன.​

Image result for chennai it corridor

குறிப்பாக சிங்கபெருமாள் கோயில், சோலிங்கநல்லூர், மேடவாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும். ஒரு சதுர அடியின் விலை ரூ. 2,400 முதல் ரூ. 3,600 வரை இருந்திருக்கிறது.

 4.நகர உள்கட்டமைப்பு

மெட்ரோ ரயில் திட்டம், மதுரவாயல் துறைமுக சாலை திட்டம்  ஆகிய உள்கட்டமைப்பு திட்டங்கள் விருகம்பாக்கம், பெரும்பாக்கம், தி நகர், பெரம்பூர், மேடவாக்கம் போன்ற வசதிகள் மக்களை அதிகம் புறநகர்களை நோக்கி நகர்வதை குறைத்துள்ளது, இது சரியா, தவறா என்பது அடுத்து சில வருடங்களில் மக்களின் அவஸ்த்தையை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

5. தனி வீடுகள்

தனி வீடுகள் எப்பவும் போல புறநகர்களிலேயே அதிகம் சாத்தியப்படுகிறது. அல்லது நாம் மனையை வாங்கி வீடு கட்டி கொள்ளவேண்டும்.

6.அபார்ட்மெண்ட் - அதிகம் தேவைப்படும் வீடு அமைப்பு

சென்ற தலைமுறையினருக்கு இருந்த வேலை உத்தரவாதம் பெரிய அளவில் தற்போதைய தலைமுறையினருக்கு இல்லாததால், தனி இடம் வாங்கி தொட்டமிட்டு வாழும் காலம் எல்லாம் போய்விட்டது.

Image result for flats for sale in chennaiஅடுத்த 5 வருடத்தில் காலிஃபோர்னியாவில் இருப்போமா , பெங்களூருவில் இருப்போமா என தெரியாத நிலையில், சட்டென விற்றுவிட்டு போக கூடிய சொத்தை வாங்குவதையே புத்திசாலித்தனம் என முடிவெடுத்து அபார்ட்மெண்டுகளேயே அதிகம் நாடுகின்றனர்.

மேலும் தேவை, வழங்கல் என இரண்டு விதத்திலும் அபார்ட்மெண்டுக்கான மவுசே அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

7.வீடு வாங்குவதில் பெண்கள் அதிகரிப்பு

சென்னையை பொறுத்தவரையில், வீடு வாங்க நினைப்பவர்களில்  ஆண்களே வாங்க முற்பட்டாலும் ஆர்வம் காட்டும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இதில் பெரும்பாலனவர்கள் ஐடி துறையை சேர்ந்தவர்கள். சுய தொழில் செய்யும் பெண்களும் இந்தப் பட்டியலில் அடக்கம்.

ஆக நம்பிக்கை இழக்க வேண்டாம் ..! வாடிக்கையாளரும்  சரி , கட்டுமான நிறுவனங்களும் சரி ..எதிர்காலம் இருக்கிறது என்கிற 'சாதக சிக்னல்' இப்பொது இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு சாமர்த்தியமாக இடங்களை தேர்வு செய்து முன்னேறலாம்..!

பி.கு. - உங்கள் கருத்துகளை பகிர ..muthurealads@gmail.com என்கிற மின்னஞ்சலிலோ அல்லது 9043062016 என்கிற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

 

 
 

Advertisment

English Summary

How is the real estate industry in Chennai?

 
NewsFast Logo