Advertisment

Punnagai Logo

ஐசிசி கிரிக்கெட் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை... முதலிடம் பிடித்த விராட் கோலி .!

ஐசிசி கிரிக்கெட் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்தார்.

முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் தடுமாறியதால் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு சறுக்கினார். இந்த நிலையில் நாட்டிங்காமில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 97 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 103 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மேலும்,இதன் காரணமாக தரவரிசையில் 937 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடம் பிடித்தார். இன்னும் ஒரு புள்ளி பெற்று விட்டால், அதிக புள்ளிகள் பெற்ற 10 வீரர்கள் பட்டியலில் நுழைந்து சாதனை புரிவார். 

 
 

Advertisment

English Summary

ICC Cricket Test Batsman Rankings ... Virat Kohli

 
NewsFast Logo