Advertisment

Punnagai Logo

ரஜினி முதல்வரானால் புரட்சி வெடிக்கும் - அர்ஜுன் சம்பத் பகீர் பேட்டி

கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்த  அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து சட்டசபை தேர்தலில் 234 தொகுதி களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ரஜினியின் ஆன்மீக அரசியல் தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாகும். பா.ஜனதா கைக்கூலி ரஜினி என்று கூறுவது முழுக்க முழுக்க பொய்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனது ரசிகர்களை ரஜினி நிறுத்த போகிறார். ரஜினி முதல்-அமைச்சரானால் தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும்.

.கவிஞர் வைரமுத்து ஆண்டாளை பற்றி தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இது இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது.

கவிஞர் வைரமுத்துவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதை அவருக்கு வழங்கக்கூடாது.. 

என்று தெரிவித்தார்

 
 

Advertisment

English Summary

If Rajini is the CM, the revolution will erupt- Arjun Sambath

 
NewsFast Logo