Advertisment

Punnagai Logo

அரசு கல்லூரியில் மாணவியை உதவி பேராசிரியருடன் ஒத்துழைப்பு கொடுக்க சொல்லி விடுதி வார்டன்கள் பேசியுள்ள ஆடியோ

அரசு கல்லூரியில் மாணவியை உதவி பேராசிரியருடன் ஒத்துழைப்பு கொடுக்க சொல்லி விடுதி வார்டன்கள் பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவணணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு படிக்கும் மாணவி ஒருவருக்கு அந்த கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் ஒருவர் விடுதிக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு விடுதி காப்பாளர்களாக உள்ள 2 பெண் பேராசிரியைகளும், அந்த உதவி பேராசிரியருக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொல்லி மாணவியிடம் செல்போனில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரியை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் புகார் கூறிய கல்லூரி மாணவி, தனது தந்தை மற்றும் பொதுமக்கள் சிலருடன் திருவண்ணாமலை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு வந்தார். அதை தொடர்ந்து மாணவியிடம், மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி விசாரணை மேற்கொண்டார். அப்போது மாணவியின் தரப்பினர் நீதிபதியிடம் கல்லூரி விடுதி காப்பாளர்கள் பேசிய ஆடியோ பதிவை கொடுத்தனர்.இதனையடுத்து நீதிபதி மகிழேந்தியிடம், மாணவி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்தார்.

திருவண்ணாமலை கோர்ட்டில் பாலியல் புகார் கூறிய மாணவியிடம் விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி மகிழேந்தி பிற்பகல் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்தார். அவருடன் கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியாவும் வந்திருந்தார்.

கல்லூரியில் நீதிபதி மகிழேந்தி பாலியல் புகார் கூறிய மாணவியின் வகுப்பு தோழிகள், மாணவர்கள் மற்றும் மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது மாணவிகள் நீதிபதியிடம், மேற்கண்ட குற்றச்சாட்டை கூறினர். பின்னர் நீதிபதி ஒவ்வொரு வகுப்பறை, கல்லூரி வளாகம், விடுதி போன்றவற்றை ஆய்வு செய்தார்.

அப்போது மாணவி குற்றம் சாட்டிய உதவி பேராசிரியரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடமும் விசாரணை மேற்கொண்டார். நீதிபதி மகிழேந்தி, மாணவி கூறிய பாலியல் தொல்லை குறித்து பல்வேறு கேள்விகளை சரமாரியாக முதல்வர் ராஜேந்திரனிடம் எழுப் பினார். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் முதல்வர் திணறினார்.

சக மாணவிகள் தங்களது அடையாள அட்டையை பாலியல் புகார் அளித்த மாணவி திருடி விடுவதாக கூறி உள்ளனர். எனவே அடையாள அட்டையை இழந்த மாணவிகளுக்கு கல்லூரி சார்பில் புதிய அடையாள அட்டை வழங்கியதற்கான ஆவண ங்கள், அட்டையை தொலைத்ததற்காக மாணவிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட ரசீது போன்றவற்றை சமர்ப்பிக்குமாறு நீதிபதி கேட்டார். ஆனால் கல்லூரி நிர்வாகத்திடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் திணறினர்.

இதேபோல நீதிபதி சுமதி சாய்பிரியாவும், பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இந்த சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நீதிபதி மகிழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், பாலியல் தொல் லை புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வது குறித்து காவல் துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். கல்லூரி விடுதி காப்பாளர்கள்  பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.

விடுதியின் வார்டன்களான மைதிலி மற்றும் புனிதா  மாணவியை புகார் கொடுத்தது குறித்து மாணவியை மிரட்டியதுடன் இது ஒரு சின்ன மேட்டர், சாரின் ஆசையை நிறைவேற்றிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் மறந்துவிடு என பிரெயின் வாஷ் செய்துள்ளனர்.

மேலும், சாருடன் நீ அட்ஜஸ்ட் செய்தால் உன்னை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைப்பதுடன், பெரிய லெவலுக்கு கொண்டு போவார். இதே கல்லூரியிலேயே நீ பேராசிரியராக வரலாம். அவருக்கு ரெண்டாம் தாரமாகவும் ஆகி வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்' என்றும் மாணவியிடம் பேசி வலை விரித்துள்ளனர். இதுமட்டுமல்லாது, நீ என்ன புகார் கொடுத்தாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவோம், உனக்கு எதிராக ஆதாரங்ளை நிரூபிக்க முடியும் என்றும் வார்டன்கள் மாணவியை மிரட்டியுள்ளனர்.

பெரிய டிஜிபியே ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் உனது பெற்றோர் கேட்டால் நீ வரவே இல்லை என்றும் கூறிவிடுவோம் என தெனாவட்டாக பேசியுள்ளனர் வார்டன்கள். மேலும், இனிமேல் யாராவது தும்மினால் கூட அனைவரையும் வெளியேற்றிவிடுவேன் என அனைத்து மாணவிகளையும் மிரட்டுகிறார் குறித்த வார்டன். விடுதி வார்டன்களாக உள்ள புனிதாவும் மைதிலியும் அக்கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ளனர் .

 
 

Advertisment

English Summary

in govt college hostel warden forcing to adjust with asst prof -audio

 
NewsFast Logo